8வயது தங்கையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அண்ணன்- டெல்லியில் சம்பவம்

8 வயது தங்கையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி அவளது வாழக்கையை சீரழித்த அண்ணனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களின் மகள் ரத்தப்போக்குடன் அவதிப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதியானது. நடந்தவற்றை சிறுமி கூறியதுடன் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி சிறுமியை நேரில் சந்தித்துள்ளார்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள சிறுமியின் நிலை மோசமாக இருப்பதாக ஸ்வாதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சிறுமியின் மருத்துவ செலவை பெண்கள் ஆணையம் ஏற்றுக் கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]