8மாத குழந்தையுடன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட தந்தை- குருநாகலில் சம்பவம்!

தனது 8 மாத குழந்தையுடன் தந்தையொருவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குருநாகல் பல்லேகொட்டுவ வெல்லவ பகுதியைச் சேர்ந்த நபரை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச் சம்பவம் குறித்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் முன்னால் நேற்று மாலை குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]