8ஆம் திகதி விமலரத்ன தேரரின் இறுதி கிரியைகள்

விமலரத்ன தேரரின் இறுதி கிரியைகள்

காலமான பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதி கிரியைகள் பெப்ரவரி 8 ஆம் திகதி மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மைதானத்தில் அவரது இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளது.

வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர், நேற்று காலமானார்.

பெல்லன்வில விமலரத்ன தேரர் நேற்று முன்தினம் காலை மியன் குமரா என்ற யானைக்கு உணவு கொடுக்கும் போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

அதனையடுத்து, காயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பெல்லன்வில விமலரத்ன தேரரது இடுப்பு எலும்பு உடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]