12 ராசிக்காரர்களில் அதிகம் பாதிக்கப்படும் ராசிகாரர்கள் இவர்கள்தானாம்- கொஞ்சம் உஷாரா இருங்க!!

12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர் எந்தவிதமான நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து பார்ப்போம்,

மேஷம்
அனைத்தையுமே மிகையாக சிந்திக்கும் இவர்கள் சுலபமாக கோபமும், எரிச்சலும் அடைவார்கள். அதனால் தலைவலி, பல் வலி, பற்களைக் கடித்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாமே மேஷ ராசிக்காரர்களுக்கு சாதாரணமாக ஏற்படக்கூடியது.
தலை மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும். மேஷ ராசியை கொண்டவரின் மூளை எப்போதுமே மிகையான நேரத்திற்கு வேலை செய்யும்.

ரிஷபம்
சுக்கிரன் தான் ரிஷப ராசியை ஆளுகிறது. சுக்கிரன் வலுவாக இருந்தால், அழகிய, திடமான பற்கள் மற்றும் கூர்ந்து கேட்கக்கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள்.இவர்களுக்கு அடிக்கடி சளியும், காய்ச்சலும் பிடித்துக் கொள்ளும். சுக்கிரன் வலுவடைந்து இருந்தால், தீவிர தொண்டை தொற்றுக்கள், தைராய்டு, டான்சிலிடிஸ், தீவிர கழுத்து மற்றும் காது தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்படுவார்கள. மேலும் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மிதுனம்
மிதுனத்தை ஆள்வது புதன் கிரகமாகும். இது உடலில் உள்ள மூட்டுக்கள் மற்றும் சுவாச அமைப்பை ஆளுகிறது. அதனால் பொதுவான சளிக்கு ஆளாவார்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுனம் வலுவிழந்து கிடந்தால் தீவிர காய்ச்சல், இருமல் மற்றும் தசைநாண் அழற்சியால் அவர்கள் சுகவீனம் அடைவார்கள்.

கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசி, வயிறு மற்றும் செரிமான அமைப்புடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. அதிக உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிப் பொங்கும் வகையில் உள்ள கடக ராசிக்காரர்கள், செரிமான அமைப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.சந்திரனின் ஆளுமையால் தங்கள் கோபம் அல்லது வலியை அவர்களால் போக வைக்க முடியவில்லை என்றால், குடல் பிரச்சனைகள், வயிற்றில் அல்சர் மற்றும் செரிமானமின்மையால் அவர்கள் அவதிப்படுவார்கள்.’

சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்மம், இதயத்தையும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் ஆளும். அதனால் அவர்கள் அதிகார தன்மையுடன், வாழ்க்கையில் அதிக தன்னம்பிக்கையுடன் விளங்குவார்கள். இருப்பினும், வலுவிழந்த சிம்மம் என்றால் இதயம், ஊக்கமின்மை மற்றும் முதுகு பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.

கன்னி
எதெற்கெடுத்தாலும் ஓடத்துடிக்கும் அவர்கள் பொதுவாக எல்லாவற்றிலும் அவசரமாக இருப்பார்கள். அவர்கள் மனது அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதால், தொடர்ச்சியான ஓய்வின்மையே இருக்கும். அதனால் உணவு அலர்ஜி, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தடையும்.

துலாம்
சுக்கிர கிரகத்தால் ஆளப்படும் துலாம் ராசி, சிறுநீர்ப்பை செயல்பாடுகள் மற்றும் சிறுநீரகங்களை ஆளும். இன்பத்தால் செழித்தோங்கும் துலாம் ராசிக்காரர்கள் எதையுமே அளவுக்கு அதிகமாக செய்யாமல் இருப்பதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால், அவர்கள் துயரத்தில் ஆழ்த்தப்படுவார்கள். அதனுடன் சேர்த்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் தீவிர சிறுநீர்ப்பை அழற்சிக்கு ஆளாவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். தங்களுக்கு சொந்தமானது என நினைப்பவற்றின் மீது அவர்கள் ஆட்டிப்படைக்கும் மற்றும் சொந்தம் கொண்டாடும் குணத்தை கொண்டிருப்பார்கள். எப்போதும் எதிர்மறையாகவும் மற்றும் எதிர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்களை ஆளும் ப்ளூட்டோ கிரகம், ஹார்மோன்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
சீரற்ற மாதவிடாய், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுக்கள் போன்றவைகள் இவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் ஆகும்.

தனுசு
குருவால் ஆளப்படும் தனுசு ராசிக்கார்கள் தங்களின் உயிர், கண் பார்வை, தொடை மற்றும் கல்லீரலின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அளவுக்கு அதிகமான நம்பிக்கை அவர்களின் பார்வையை பாதிக்கும், முதுகெலும்பில் காயத்தை ஏற்படுத்தும், நச்சுத்தன்மை பிரச்சனைகளை உண்டாக்கும்.

மகரம்
கடின உழைப்பாளியான மகர ராசி, எலும்புகள், குறிப்பாக உடலில் உள்ள மூட்டுக்களை ஆளும். பிடிவாதம் நிறைந்தவர்களான இவர்கள், கடினமாக உழைத்து தங்கள் லட்சியங்களை அடைபவர்கள். அதனால் அவர்களின் எலும்புகளும், மூட்டுக்களும் வலுவிழக்கும்.

கும்பம்
சந்தோஷமாக இருக்கும் கும்ப ராசி, மூட்டுக்களின் அசைவையும் உடலையும் ஆளும். நரம்புகளின் ஓட்டத்திற்கும், உந்துவிசைக்கும் அவர்கள் பொறுப்பாகும்.
சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டு, தங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கவில்லை என்றால் இதய நோய்கள், கீல்வாதம், மூட்டுகளில் வீக்கம், ஆஸ்துமா, சுருள் சிரை நாளங்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவைகளால் அவதிப்படுவார்கள்.

மீனம்
நடைமுறைக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போவதால், வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களினால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இது அதிகமாகும் போது, அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து, அவர்களுக்கு பல வியாதிகளை உண்டாக்கிவிடும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]