தியத்தலாவ பஸ்ஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது!!

தியத்தலாவ பகுதியில் பஸ்ஸொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சம்பவத்தின் பின்னர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்­கொலை செய்­து­கொள்­வ­தற்­காக எடுத்துச் சென்றபோதே குண்டு தவறி வெடித்­த­தாக தியத்­த­லாவ – கஹ­கொல்ல பகு­தியில் பஸ் வண்­டி­யினுள் வெடித்த கைக்­குண்டை எடுத்துச் சென்­ற­தாக கூறப்­படும் கஹ­கொல்ல இரா­ணுவ முகாமில் சேவை­யாற்றும் சார்ஜண்ட் மேஜர் தர இரா­ணுவ வீரர் பொலி­ஸா­ருக்கு வாக்கு மூல­ம­ளித்­துள்ளார்.

தியத்­த­லாவ வைத்­தி­ய­சா­லையில் பொலிஸ் பாது­காப்பில் குறித்த சார்ஜண்ட் சிகிச்சை பெற்றுவரும் நிலை­யி­லேயே நேற்று முன்தினம் மாலை அவ­ரிடம் விஷேட பொலிஸ் குழு, வைத்­தி­ய­சா­லையில் வைத்து முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் அவர் இதனை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

தான் பல­ரிடம் 10 இலட்சம் ரூபா­வுக்கும் மேல் கடன் வாங்­கி­யுள்­ள­தா­கவும், அந்த கடன் தொகையை அவர்கள் திரும்ப கேட்கும்போது தன்னால் அதனை திருப்பிக் கொடுக்க முடி­யாத சூழல் நில­விய நிலை­யி­லேயே தற்­கொலை தொடர்பில் தீர்­மா­ன­மெ­டுத்து குண்டை முகா­முக்கு எடுத்துச் சென்ற­தா­கவும், முகாமில் வைத்து தற்­கொலை செய்­து­கொள்­வதே திட்­ட­மாக இருந்தபோதும் குண்டு இடையில் தவ­று­த­லாக பஸ் வண்­டி­யி­லேயே வெடித்­து­விட்­ட­தா­கவும் அவரின் வாக்குமூலத்தில் குறிப்­பி­டப்பட்­டுள்­ள­தாக அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார்.

கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் தான் வடபகு­தியில் சேவை­யாற்றும்போது குறித்த கைக்­குண்டு தனக்கு கிடைக்கப் பெற்­ற­தா­கவும், அது நல்ல நிலையில் இருக்­க­வில்லை எனவும் அவர் வாக்கு மூலத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

குறித்த சார்ஜண்ட் மேஜர், இயந்­திர பொறி­யியல் படை­ய­ணியின் கஹ­கொல்ல முகாமின் ஆயுத களஞ்­சி­யத்­துக்கு பொறுப்­பாக செயற்­பட்­டவர் எனவும் அவர் விடு­மு­றைக்­காக வீடு சென்று குறித்­த தினம் கஹ­கொல்ல முகா­முக்கு திரும்­பிக்­கொண்­டி­ருக்கும்போதே குண்டை உடன் எடுத்து வந்­துள்­ள­மையும் இது­வ­ரை­யி­லான பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­தி­ய­ாகி­யுள்­ளது.

அதன்­படி பஸ்ஸில் வெடித்த குண்டு திய­த­லாவ – கஹ­கொல்ல முகா­முக்குள் எடுத்துச் செல்லும் நோக்கத்­து­ட­னேயே குறித்த சார்ஜண்ட் மேஜ­ரினால் உடன் கொண்டு செல்­லப்பட்­டுள்­ளமை உறு­தி­ய­ாகி­யுள்­ளது. மாத்­த­ளையைச் சேர்ந்த குறித்த சார்ஜண்ட் மேஜர் தர வீரர், விடு­மு­றைக்கு சென்­று­விட்டு மீள முகா­முக்கு யாழில் இருந்து திய­த்த­லாவ நோக்கி பய­ணிக்கும் பஸ்ஸில் வந்­துள்­ள­துடன், கண்­டியில் வைத்து அன்­றைய தினம் அதி­காலை 1.05 மணிக்கு அவர் பஸ்ஸில் ஏறி­யுள்ளார். பஸ் மாற்­றப்­பட்டு திய­த்த­லாவை நோக்கி சென்ற மற்­றைய பஸ்­ஸுக்கு பண்­டா­ர­வ­ளையில் வைத்து ஏற்­றப்­பட்­டுள்ளார். இந்த நிலையில் அந்த பஸ் வண்­டியில் சாரதி இருக்கை பக்­க­மாக 3 ஆவது நிரலில் 3 ஆசனம் கொண்ட தொகு­தியில் அவர் நடுவில் அமர்ந்­துள்ளார்.

அவ­ரது வலது புறத்தில் கஹ­கொல்ல முகாமில் சேவை­யாற்றும் இலி­கிதர் ஒரு­வரும் இடது புறத்தில் இரா­ணுவ பொலிஸ் பிரிவின் உத்­தி­யோ­கத்தர் ஒருவரும் இருந்­துள்­ளனர்.

யாழ். – பண்­டா­ர­வளை பஸ்ஸில் கண்­கா­ணிப்பு கமரா இருந்த நிலையில் அதன் காணொ­ளி­களை சோதித்­துள்ள பொலிஸார் குறித்த சார்ஜண்ட் மேஜர் ஒரு­வ­கை­யான பதற்­றத்­து­ட­னேயே பஸ்ஸில் பய­ணித்­ததை அவதானித்­துள்­ளனர். அத்­துடன் எரிந்த பஸ்­ஸிலும் கண்­கா­ணிப்பு கமரா இருந்­துள்ள நிலையில் குண்டு வெடிப்பு தொடர்பில் உறுதி செய்ய அந்த காணொ­ளி­களை மீளப்பெறும் பொருட்டு நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் அது தொடர்­பிலான கரு­விகள் மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ளன.

இந் நிலையில் கஹகொல்ல முகாம் அருகே இறங்கும் நோக்கத்துடன் இலிகிதருடன் குறித்த சார்ஜண்ட் மேஜர் தயாராகியுள்ளார்.

இதன்போது அவரது தொலைபேசி கீழே விழுந்துள்ளதுடன் அதனை எடுக்க முற்பட்டபோது மடியில் இருந்த பையில் இருந்தே குண்டு வெடித்துள்ளதும் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]