நடிகைக்குப் போட்டியாக உடல் எடையைக் குறைக்கும் நடிகர்

தமிழ் திரையுலகிற்கு சற்றுத் தாமதமாக வந்த நடிகர், மலையாள படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம். இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறதாம். இவர் நடிப்பில் தற்போது உருவான படத்திற்கு அதிக உடல் எடையை கூட்டினாராம்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் பெரிய நம்பர் நடிகை நாயகியாக நடிக்க இருக்கிறாராம். நடிகை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருப்பதால், தானும் உடல் எடையை குறைக்க போகிறேன் என்று முடிவு எடுத்திருக்கிறாராம். இவர் எடுத்தது படத்திற்காக இல்லையாம், நடிகைக்காக என்று பலரும் கூறி வருகிறார்களாம்.