7000 பொலிஸார் நாளைமறுத்தினம் பாதுகாப்பு கடமையில்

7000 பொலிஸார் நாடாளாவிய ரீதியில் நாளைமறுதினம் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்களின் மே தினக் கூட்டங்களில் அசம்பாவிதம் ஏதம் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பிரதி ஊடகப்பேச்சாளர் பியந்த ஜயகொடித் தெரிவித்தார்.

விசேடமாக கொழும்பு, கண்டி நகரங்களில் பாரிய பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாளை நள்ளிரவு முதல் மேற்படி 7000ஆயிரம் பொலிஸாரும் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

கொழும்பில் பல்வேறு இடங்களில் மே தினகங்கள் இடம்பெறவுள்ளதால் குறித்த மே தினகங்கள் இடம்பெறும் பிரதேசத்தின் வழிகளுக்கு பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்தும் ஒழுக்குமுறை வகுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பில் பிரதான போக்குவரத்தை மேற்கொள்ளும் 138, 154, 176, 103 ஆகிய பஸ்களுக்கான மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]