700 ரூபாவுக்கான கூட்டு ஒப்பந்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று கையெழுத்திடப்படவிருந்த 700 ரூபாவுக்கான கூட்டு ஒப்பந்தம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது எனத் தெரிவித்தும் இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக ‘ 1000 ரூபா இயக்கம் ” பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை 10 மணி முதல் முன்னெடுத்திருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அங்கு பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பாட்டதையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது மகஜர் ஒன்றை தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்காமல் முதலாளிமார் சம்மேளனத்திடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையிலேயே கூட்டுஒப்பந்தம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து ஹட்டனிலும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அட்டன் தொடக்கம் கொழும்பு மற்றும் நுவரெலியா வரையிலான பிரதான வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]