700 ரூபாய்க்கு கையொப்பம் இடுவதை எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்கள் இன்று 700 ரூபாய்க்கு கையொப்பம் இடுவதை எதிர்க்கின்றோம் என அட்டன் கொழும்பு மற்றும் அட்டன் நுவரெலியா ஆகிய பிரதான வீதியை மறித்து மல்லியப்பு சந்தியில் சுமார் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போக்குவரத்து தடையை ஏற்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

28.01.2019 அன்று காலை முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் மேபீல்ட், புருட்ஹில், வெலிஓயா, செனன், ஸ்டிரதன் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு கோஷங்களை இட்டு பாதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

இதன்போது அட்டன் தொடக்கம் கொழும்பு மற்றும் நுவரெலியா வரையிலான பிரதான வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக 28.01.2019 அன்று கையொப்பமிடவுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டகாரர்கள் வாக்குறுதி வழங்கியவாறு ஆயிரம் ரூபாய் சம்பளமே எமக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]