70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட கோரிக்கை

70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை அனைத்து அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாக கூறினார்.

அத்துடன் 70ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வின் போது விஷேட அதிதியாக பிரித்தானிய அரச குடும்பத்தை பிரதிநிதித்துவம் செய்து எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.