7 மீனவர்கள் மாயம்

7 மீனவர்கள்

7 மீனவர்கள் மாயம்

மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற ஆழ்கடல் படகு ஒன்று 07 மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது.

கடந்த மாதம் 04ம் திகதி அவர்கள் காலி மின்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றுள்ளதுடன், அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என, மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

ஹிக்கடுவ, தெல்வத்தை, தொட்டகமுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 07 பேர் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் கடந்த மாதம் 29ம் திகதி வரை உறவினர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக மீட்டியாகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]