7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொன்று தாய் தற்கொலை – கொட்டகலை பகுதியில் சம்பவம்

தாய் ஒருவர் தனது 7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் நடந்துள்ளது.

கே.நித்தியகல்யாணி (26) அவரது மகன் சி.சந்தீப் அஷ்விந்தன் (7 மாதம்) ஆகியோருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று நள்ளிரவு உறவினர்களுடன் வீட்டில் இருந்துள்ளதுடன் வீட்டிற்கு வெளியில் கொய்யாபழ மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயின் சடலத்தையும், குழந்தையின் சடலத்தையும் இன்று காலை திம்புள்ள, பத்தனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஹட்டன் நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]