ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆஸ்மிங்டன் நகரத்தில் உள்ள வீட்டின் வெளியே இரண்டு துப்பாக்கிகள் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறை, பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு 7 பேரின் உடல்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். அதில் நான்கு குழந்தைகளும் அடக்கம்.

தொடர்ந்து 7 பேரின் உடல்களை கைப்பற்றிய காவல்துறை அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்கள் என்ன காரணத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 22 ஆண்டுகளில் நடைபெற்ற மிக பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]