7 குற்றவாளிகளும் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு

7 குற்றவாளிகளும் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு

போகம்பர சிறைச்சாலைக்கு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டு வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளும் இன்று மாலை 6.00 மணியளவில் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் குற்றவாளிகளின் குற்றச்சாட்டு பத்திரங்களில் நீதிபதிகள் கையொப்பமிட்டதன் பின்னர் ;இன்று மாலை 6 மணியளவில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

குற்றவாளிளை அழைத்துச்செல்லும் போது, நீதிமன்ற வீதி இருபக்கங்களிலும் பொது மக்கள் கூடி நின்று பார்த்தனர்.

விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை காவலர்களின் பாதுகாப்பின் மத்தியில் 7 குற்றவாளிகளும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]