7 அத்தியாவசிய பொருட்களுக்கு ஏப்ரல் வரை நிலையான விலை குறைப்பு

புதுவருடத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சதொச நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 62 ரூபாய்க்கும், உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட சிவப்பு அரிசி ஒரு கிலோகிராம் 73 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

372 லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இந்த விலைகளில் பொருட்களை கொள்வனவு செய்யலாம்.

இறக்குமதி செய்யப்பட்ட சம்பா ஒரு கிலோகிராமின் விலை 71 ரூபாய், நாட்டரசி ஒரு கிலோகிராமின் விலை 82 ரூபாய்.

சதொசவில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 135 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 139 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

ஒரு கிலோகிராம் நெத்தலி 515 ரூபாய், ஒரு கிலோகிராம் வெள்ளைச் சீனியி 100 ரூபாய், ஒரு கிலோகிராம் பருப்பு 124 ரூபாய் ஆகும்.

லங்கப சத்தோச மற்றும் காகில்ஸ், கீல்ஸ், ஆப்பிக்கோ, லாப் ஆகிய விற்பனை நிலையங்களில் குறித்த விலைகளில் பொருட்களை பொதுமக்கள் கொள்வனவு செய்யமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலை மட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நிலையாக பேணுமாறு வாழ்க்கை செலவு குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்காக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவ்வாறான வர்த்தகர்கள் குறித்து நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் அரசாங்கம் கேட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]