ஐ.தே.க ஏறாவூர் நகர சபைப் பிரிவின் அபிவிருத்திக்கான தேர்தல் விஞ்ஞாபனம்

தேர்தல் விஞ்ஞாபனம்

ஐ.தே.க ஏறாவூர் நகர சபைப் பிரிவின் அபிவிருத்திக்கான தேர்தல் விஞ்ஞாபனம்

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபைப் பிரிவின் அபிவிருத்திக்கான தேர்தல் விஞ்ஞாபனம் ஐ.தே.க சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக அதன் முக்கியஸ்தர் முஹம்மத் சறூஜ் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை 16.01.2018 ஏறாவூர் நகர மத்தியில் அமைந்துள்ள ஐ.தே.க தலைமைக் காரியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஐ.தே.க. சார்பில் போட்டியிடும் ஸ்ரீலமுகா வேட்பாளர்களும் பிரதேச ஆதரவாளர்களும் பேர் கலந்து கொண்டனர்.

வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பான விஞ்ஞாபனத்தில்@ ஏறாவூர் நகர சபையை நாட்டின் அதி சிறந்த மாநகர சபையாக தரமுயர்த்துதல்,
ஏறாவூர் பிரதேசத்தில் சர்வதேச தரத்திலான அதி சிறந்த தொழிற்பேட்டை உருவாக்கி வீட்டுக்கொருவர் வீதம் வேலைவாய்ப்பு வழங்குதல்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட 1350 கோடி ரூபா நிதிச் செலவிலமைந்த வடிகாலமைப்பு மற்றும் கழிவு நீர் அகற்றல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தல்,

சுமார் 30 கோடி ரூபாய் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரமாண்டமான அதி நவீன சந்தைச் சதுக்கம் முழுமையாக, விரைவாகப் பூர்த்தி செய்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்தல்,

சுமார், 20 கோடி ரூபாய் நிதியில் 2000 பேர் அமரக்கூடிய மிகப் பிரமாண்டமான கலாச்சார மண்டபம் மற்றும் நவீன இலத்திரனியல் வாசிகசாலைக் கட்டிடத்தைப் பூர்த்தி செய்தல்.

படுவான்கரை மக்களின் போக்குவரத்து மற்றும் விளை பொருட்களின் சந்தை வாய்ப்புக் கருதி ஏறாவூர் வாவியை ஊடறுத்து படுவாங்கரைக்குச் செல்ல ஆற்று வழிப்பாதை (குநசசல) ஏற்படுத்தல்.
சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் ஒன்றை நிறுவுதல்.

ஏறாவூர் நகர சபையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்குவதுடன் புதிய ஆளணிகளை உருவாக்கி புதிய நியமனங்கள் வழங்கல்.

வரிகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சிறுவர் பூங்காக்களில் அறவிடப்படும் கட்டணங்கள் முற்றாக நிறுத்துதல்.
ஏறாவூர் நகரத்தில் இருந்து பல இடங்களுக்கும் செல்லக்கூடிய போக்குவரத்து பஸ் நிலையம் அமைத்தல்.

சகல வசதிகளும் கொண்ட நவீன சிறுவர் பூங்காக்கள் உருவாக்கல்.
பெண்களுக்கு தனியாக உடற்பயிற்சிக்கான நடை பாதை அமைத்தல்.
மலசல கூட வசதிகளற்ற குடும்பங்களுக்கு முறையான மலசல கூடங்கள் அமைத்துக் கொடுத்தல்.

குடி நீர் வசதியில்லாத சகல இடங்களுக்கும் உடனடியாக சுத்தானமான குடிநீர் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட இன்னும் பல முன் மொழிவுகள் கூறப்பட்டுள்ளன.

தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]