கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் விழா

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் வடக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன், குணசீலன், சர்வேஸ்வரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உயர்தரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]