தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேசுவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்த போதும், கூட்டமைப்பு பேசவரவலில்லை – ரிசாட்பதியுதீன்

ரிசாட்பதியுதீன்

யாழ்ப்பாணம்; தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேசுவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்த போதும், கூட்டமைப்பு பேச வரவலில்லை. முஸ்லீம் மக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியமாகும் என அமைச்சர் ரிசாட்பதியுதீன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கான ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் இன்று (03) யாழ்.நாவாந்துறைப் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அவர் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் தீர்வை கேட்டு நிற்கும் அல்லது தீர்வை பெற்று தருவோம் என ஆட்சிக்கு வந்தவர்கள் நிச்சயமாக தமிழ் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் தான். அவர்கள் எந்தவொரு தீர்வை பெறுவது என்றாலும் குறிப்பாக வட கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் விருப்பு சந்தேகங்களை கழைந்து இணக்கப்பாட்டுடன் செயற்படும் போது தான் தீர்வு சாத்தியமாகும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் த.தே.கூட்டமைப்பிடம் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தோம். நல்லாட்சி அரசில் சகோதர இனமாகவும் பல அழிவுகளுக்கு உள்ளான முஸ்லிம்களுடன் பேசுங்கள் என கேட்டோம். இது வரை எமது கட்சியுடன் அவர்கள் பேசவில்லை.

மலையக தமிழர், இஸ்லாமியர், தமிழ் மக்கள், எதிர்காலத்தில் இந்த நாட்டில் பேரினவாத சக்திகள் சிறுபான்மை இனத்தின் அதாவது, எமது உரிமையை பறித்தெடுக்க திட்டமிட்டுள்ளமையை நாம் பார்த்துள்ளோம்.

பொருளாதாரத்தை சீரழித்து எம்மை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். மதங்களிடத்தில் பிழவு ஏற்படுத்தி பிரிக்க நினைக்கிறர்கள். ஒன்று பட்டு செயற்படும் விடயங்களில் நாம் ஒன்று பட வேண்டும்.

சிறுபான்மைகளை பாதிக்கும என கடந்த தேர்தலின் போது பலமுறை எமது வேண்டுகோள் நாம் விடுத்திருந்தோம்.அவர்கள் காதுக்கு எட்டவில்லை. அரசுடன் சேர்ந்து ஆட்சியை கொண்டுவந்தார்கள். 4 தசாப்தமாக மக்கிளிடத்தில் தீர்வை பெற்று தருவதாக கூறி வருகிறார்கள். இன்னும் தீர்வுக்கான வழிதமிழ் மக்களுக்கு தீர்வை கேட்டு நிற்பதாக கூறும் அவர்கள் உண்மை தன்மையுடன் இருக்கிறர்களா என்பது கேள்விக்குறியாகவுள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]