கோரிக்கைகளை நிவர்த்தி செய்யாவிடின் முதலமைச்சரின் உருவப் பொம்மையினை எரிக்கும் சூழ்நிலை ஏற்படும் – வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபை

கோரிக்கைகளை நிவர்த்தி செய்யாவிடின் முதலமைச்சரின் உருவப் பொம்மையினை எரிக்கும் சூழ்நிலை ஏற்படும் – வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபை

யாழ்ப்பாணம்; இலங்கைப் போக்குவரத்துச் சபையினரின் 3 அம்ச கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சரினால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினை நகர்த்தாவிடின், முதலமைச்சரின் உருவப் பொம்மையினை எரிக்கும் சூழ்நிலை ஏற்படுமென்று வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் நேற்று (01.01) முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வரும் நிலையில், இன்று (02.01) கோண்டாவில் டிப்போவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
குடந்த 25 ஆம் திகதி முதல் வவுனியா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்திற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சேவையினை கொண்டு செல்லுமாறு கூறி வவுனியா பஸ் நிலையத்தினை முடியுள்ளார்.

இந்த ஆணை முதலமைச்சரினால் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் முதல், பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

ஆந்தவகையில், ஓவ்வொரு சாலையிலும் உள்ள போக்குவரத்துச் தொழிற்சங்கமும் அரசாங்கத்தினால் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டது. வடமாகாண போக்குவரத்துச் சபையின் பிரச்சினைகளை ஆரம்பத்தில் இருந்து முதலமைச்சரிடம் கொண்டு சென்றிருந்தோம்.
ஆனால், மத்திய அரசாங்கத்தின் கீழ் சேவையாற்றுகின்றீர்கள். நான் மாகாண அமைச்சின்கீழ் இருக்கின்றேன். உங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று முதலமைச்சர் தெரிவித்தாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டுமாயின், எமக்கென தனி இடம் பிறித்துத் தர வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் விசாலமாக உள்ளது. அதில் ஏற்கனவே தடுப்பு போடப்பட்டிருக்கின்றது. தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு இரண்டு நிர்வாகங்கள் நடைபெற வேண்டும். தனியார் பேருந்துக் குழுவினர் தனி இடத்திலும், இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் தனியான இடத்திலும் சேவைகளை முன்னெடுப்பதற்கும் நடுவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு, பயணிகள் இரு தரிப்பிடத்திற்கும் செல்லுமாறு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட வேண்டும்.

ஏதிர்காலத்தில் எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில், நிரந்தரமாக இலங்கைப் போக்குவரத்துத் துறையினருக்கு எழுத்து மூலம் ஆவணம் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தமது ஆட்சேபனைகள் தீர்;க்கப்பட்டால், புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சேவை செய்வதற்கு தடை ஏதும் ஏற்படாது.

வவுனியா பேருந்து நிலையம் அவசர நிலைக்கு ஏற்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் அல்ல. போக்குவரத்துத் துறையினரை அடிமையாக வைத்திருக்க வேண்டுமென்ற சதியின் கீழும், திட்டமிடலும் கீழும், போக்குவரத்து அமைச்சராக இருந்த டெனீஸ்வரனின் அழைப்பின் பேரிலும், பல காலம் சேவையில் ஈடுபட்டிருந்த போது, அவமானங்கள், தாக்குதல்கள், பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோம்.

தற்போது வடமாகாண போக்குவரத்து அமைச்சினை டெனிஸ்வரனிடம் இருந்து பறிச்சு, முதலமைச்சர் தன்னகத்தே வைத்துக்கொண்டுள்ளார். முதலமைச்சர் எத்தனை அமைச்சுப் பொறுப்புக்களையும் வைத்திருந்தால் எமக்குக் கவலையில்லை. ஒவ்வொரு அமைச்சுக்களின் தார்மீக பொறுப்புக்களை உணர்ந்து முதலமைச்சர் செயற்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொழிற்சங்க ஊழியர்களிடம் எந்தவித கருத்துக்களையும் பெறாது தன்னிச்சையாக, பொது மக்களுக்காக உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் குறைபாடுகளை சீர்செய்யாது. ஊடனடியாக கடந்த 25 முதல் புதிய பஸ் நிலையத்தில் சேவையாற்ற வேண்டுமென்பது கண்டிக்கத்தக்க விடயம்.

தனித்துவத்தினை இழந்து தமிழ் மக்கள் படும் அவலம் அனைவருக்கும் தெரியும். தோன்மையான இலங்கை போக்குவரத்துச் சபை, தனித்துவத்தினை இழந்து, இன்னொரு சபைக்கு அடிமைத் தனமாக இருப்பது மனவருத்தத்திற்குரியது.

முதலமைச்சரை மதிக்கின்றோம். ஆனால், முதலமைச்சரினால் விதிக்கப்பட்ட இந்த ஆணை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எமது இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கு மாகாண போக்குவரத்துச் சபையினரும் கைகோர்க்க முன்வந்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச துறை சார்ந்தவர்கள், முதலமைச்சருடன் பேசி, தமது கோரிக்கைக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவண செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]