66 பயணிகளுடன் பயணித்த ஈரான் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து

ஈரான் விமானம்

66 பயணிகளுடன் பயணித்த ஈரான் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து

ஈரானில் 66 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் பயணித்த பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஈரானின் டெஹ்ரான் நகரில் இருந்து யாசுஜ் நகருக்கு உள்நாட்டு நேரப்படி இன்று காலை 5 மணிக்கு, ஏஸ்மேன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர் 72 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 66 பயணிகளும், விமான ஊழியர்களும் பயணித்தனர்.

விமானம் புறப்பட்டு, ஈரானின் இஸ்பாஹன் மாநிலத்தில் உள்ள செமிரோம் மலைப்பகுதிக்குள் சென்றபோது, ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து விமானம் விலகியது. அதன்பின் நீண்டநேரமாகியும், விமானத்தின் சமிக்ஞை ரேடாருக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து, அங்கு மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டதில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்து.

முதல் கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முற்போட்டபோது, மலையில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து மீட்புப்பணிக்காக ஹெல்காப்டர்களை ஈரான் அரசு அனுப்பிவைத்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானபகுதி அடர்ந்த வனப்பகுதி, மலைப்பாங்கான பகுதி என்பதால், அங்கு அம்புலன்ஸ் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், கூடுதலாக ஹெலிகொப்டர்களை அனுப்ப ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]