உலக உணவு பாதுகாப்பு விடயத்தில் தென்னாசியாவில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது

2017ம் வருடத்திற்கான உலக உணவு பாதுகாப்பு விடயத்தில் தென்னாசியாவில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.

உலகில் உள்ள 113 நாடுகளில் உணவு பாதுகாப்பு விரிவாக்கம் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் இலங்கைக்கு 66வது இடம் கிடைத்துள்ளதுடன், நேபாளத்துக்கு 81வது இடமும், மியன்மாருக்கு 80வது இடமும் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் 77 வது இடத்திலும், இந்தியாவுக்கு 74வது இடமும் கிடைத்துள்ளது.

கட்டுப்படியாகக்கூடிய விலை, சிக்கனத் தன்மை, தரம் மற்றும் பாதுகாப்பு மூன்று முக்கிய கூறுகளின் கீழ் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, அயர்லாந்து முதலிடத்தையும், அமெரிக்காவில் இரண்டாவது இடத்தில், மற்றும் ஐக்கிய ராஜ்யம், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களையும் பிடித்துள்ளது.