64.8 பில்லியன் ரூபாய்க்கு விமானங்கள் கொள்வனவு?

64.8 பில்லியன் ரூபாய்க்கு பல்வேறு வகையான ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா வேவு விமானங்களையும் கொள்வனவு செய்யத் விமானப்படை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பாதுகாப்பு அமைச்சு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவை விரைவில் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.

எயர் வைஸ் மார்ஷல் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்றதை அடுத்து, முன்னர் இருந்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பணிகள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து பத்து Mi 171 SH உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் இதில் பிரதானமானது என்றும் இவை போக்குவரத்து மற்றும் போர்த் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடியவை என்றும் கூறப்படுகின்றது.

அதேவேளை,ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு விமானப்படை நான்கு Mi 17 உலங்குவானூர்திகளைக் 14.3 பில்லியன் ரூபாய்க்கு வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா சட்டவிதிகளின் கீழ் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் தமது சொந்தத் தளபாடங்களையே பயன்படுத்த வேண்டும். இந்த முதலீட்டை மீட்க நீண்டகாலம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]