625 குர்ஆன் புத்தகங்கள் மீட்பு

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரால் விநியோகிப்பதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த குர்ஆன் புத்தகங்கள் 625ஐ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கல்பிட்டி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஊடாக இந்த புத்தகங்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலையடுத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து யாரும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]