600 குளங்களை புனரமைக்க நடவடிக்கை

வடக்கில் நடைபெற்ற யுத்தத்தின் போது பல்வேறு காரணங்களால் சேதமடைந்த சுமார் 600 குளங்களை புனரமைப்பதற்கு நீர்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற்கட்ட நடவடிக்கையாக கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் 44 சிறிய குளங்கள் புனரமைக்கப்படுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இதனை கிளிநொச்சி உதவி நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

தெரிவுசெய்யப்பட்டுள்ள 44 குளங்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதுடன், மதீப்பிட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]