60 பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவரவில பகுதியில் 60 அடி பள்ளத்தில் விழ்ந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒரு காயமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கவரவில தோட்டத்திலிருந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சக்கரவண்டி, இன்று (22) அதிகாலை கவரவில. தோட்டப்பாதையில் பயணித்துகொண்டிருந்த போது 60 பள்ளத்தில் விழுந்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக சாரதியின் கட்டுபாட்டை மீறி விபத்து ஏற்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]