6 வருடம் காதலித்த காதலனை இலகுவாக கழட்டிவிட்ட ஆலியா மானசா – காரணம் தெரியுமா??

ஆலியா மானசா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வரும் “ராஜா ராணி” சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் பிரபலமான ஆலியாவிற்கு, என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அவ்வப்போது டப் ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

இவர் சீரியல்களில் நடிக்க வருவதற்கு முன்பே, இவருடன் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் இணைந்து நடனமாடிய சதீஷ் மானஸ் என்பவரை காதலித்தார். இதில் என்ன ஸ்வாரஸ்யம் என்றால். சதீஸ் ஆரம்பத்தில் இருந்தே ஆலியா காதலை மதிக்கவே இல்லையாம்.

ஆலியா துரத்தி, துரத்தி காதலித்ததும் ஒரு நிலையில் கண்டிஷன் போட்டு அவருடைய காதலை ஏற்றுக்கொண்டார். பின் தான் ஆலியாவிற்கு பிரபல தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்திக்கொண்டு ‘ராஜா ராணி ‘ சீரியல் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

6 வருடமாக நன்றாக சென்று கொண்டிருந்த, இவர்களுடைய காதல் தற்போது தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில்… திடீர் என ஆலியா அவருடைய காதலர் சதீஷிடம் , இருவருக்குள்ளும் காதல் செட் ஆகாது என கூறி குட் பை சொல்லிவிட்டாராம்.

6 வருடம் காதலித்த

இதற்கு சதீஸ் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், உன் இஷ்டம் என்பது போல் கூறிவிட்டாராம். இந்த காதல் தோல்வி குறித்து அவரிடம் யாரவது கேட்டால்… அவளாக வந்து ப்ரபோஸ் செய்தால், காதலித்தால் எனக்கும் அவளை பிடித்தது ஏற்றுக்கொண்டேன். இப்போது அவளே பிடிக்கவில்லை என கூறுகிறாள் அதையும் ஏற்று கொள்கிறேன் என பெருந்தன்மையோடு கூறி வருகிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]