6 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாத ஜோடிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

6 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த போதிலும் திருமணம் செய்து கொள்ளாத ஜோடிக்கு அமைச்சர்கள் இருவர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

குருணாகலை, பரந்தன பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான சரத் ராஜபக்ச மற்றும் 25 வயதான மனீஷா மதுவந்தி என்ற தம்பதிகளே இவ்வாறு திருமண பந்தததில் இணைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் குருணாகலை பாடசாலை ஒன்றில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி நடமாடும் சேவையினால் இந்த திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் பிரதி அமைச்சர் ஜே.சி அலவலத்வல ஆகியோர் தலைமையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

நடமாடும் சேவையை கண்காணித்த அமைச்சர்கள் குறித்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்ததுடன், சாட்சி கையெழுத்தும் வைத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]