6 மாணவர்கள் கடலில் மூழ்கிப் பலி – மண்டைத்தீவு கடற்பரப்பில்

6 மாணவர்கள் கடலில் மூழ்கிப் பலி – மண்டைத்தீவு கடற்பரப்பில்.

யாழ்ப்பாணம், மண்டைத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் ஆறு மாணவர்கள் இன்று (28) பிற்பகல் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்டைத்தீவு கடற்பரப்பில் இளைஞர்கள் 7 பேர் படகில் இருந்தவேளை அது மூழ்கியுள்ளது. கடலில் மூழ்கியோரில் ஒருவர் மாத்திரம் நீந்தி, கரையை வந்தடைந்துள்ளார். ஏனையோரில் ஐவரின் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டதுடன் மேலும் ஒருவரைத் தேடும் பணிகளில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]