6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

டோக்கியோ நகரில் உள்ள சுரங்கப்பாதையில் இடம்பெற்ற விஷ வாயு தாக்குதல் தொடர்பான வழக்கில் மேலும் 6 பேருக்கு நேற்றைய தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த விஷ வாயு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில், 1995ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20ஆம் திகதி ‘சரின்’ என்னும் விஷ வாயு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 5 ஆயிரத்து 800 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்த தாக்குதலில் அம் ஷின்ரிக்யோ என்ற மத வழிபாட்டுக்குழுவின் தலைவரான ஷோகோ அசஹாரா என்பவருக்கும் அவரது குழுவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவர்களில் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டதுடன், கடந்த 2004 ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், இந்த தீர்ப்பை ஜப்பான் உயர் நீதிமன்றம் கடந்த 2006ஆம் ஆண்டு உறுதி செய்தது.

எனினும், தண்டனை வழங்கப்பட்டவர்கள் பல்வேறு வகையில் சட்டப்போராட்டங்கள் முன்னெடுத்திருந்தனர்.

ட்ட போராட்டங்கள் வெற்றியளிக்காத நிலையில், ஷோகோ அசஹாரா மற்றும் அவரது குழுவை சேர்ந்த 6 பேருக்கு இந்த மாத ஆரம்பத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் அந்தக் குழுவில் எஞ்சி இருந்த 6 பேருக்கும் நேற்றைய தினம் ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]