248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் குறித்த அறிக்கை இன்று

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் குறித்த அறிக்கையை இன்று
election commission

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வேட்பு மனு தாக்கல் குறித்த அறிக்கையை இன்று வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரும் திகதி இந்த மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன் காரணமாக, 200க்கும் அதிகமான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 30ஆம் திகதி குறித்த மனுவை மீளப்பெறுவதாக மனுதாரர்கள் மேன்முறையீடு நீதிமன்றத்திற்கு அறிவித்தமையை அடுத்து, அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பான அறிக்கை இன்று வெளியாகிறது.