பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்ற மாநாடு ஆரம்பம்

பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்ற மாநாடு ஆரம்பம்

பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்ற மாநாடு மோல்டாவின் வெலாமா நகரில் உள்ளுர் நேரப்படி இன்று ஆரம்பமாகியுள்ளது.

இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் மாநாட்டில் இந்தமுறை ”எதிர்காலத்திற்கான திட்டங்களை திட்டமிடுவோம்” எனும் தொனிப்பொருளில் குறித்த நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்கள் சார்பில் கல்வியியலாளர்கள் அரசியல் பிரதிநிதிகள், வளவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த மாநாட்டில் இலங்கை சார்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பயிஸர் முஸ்தபா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளார்.

குறித்த மாநாடு தொடராக நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, எதிர்காலத்தின் துறைசார் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மக்களுக்கு சேவைகளை வழங்கும் பொருட்டிலான மிக முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன.

இன்று ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பில் அந்தந்த நாடுகளின் பிரதான அரசியல் காட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பெட்ரீசிய ஸ்காட்லான்ட் கலந்து கொள்ள உள்ளார்.

அமைச்சர் பயிஸர் முஸ்தபா இந்த மாநாட்டு கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்,

குறிப்பாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பாக மாநாட்டில் கலந்து கொள்கின்றவர்களை தெளிவூட்டவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]