57 ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றி – தாய் மண்ணில் தொடரை இழந்த இலங்கை

57 ஓட்டங்களினால் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்ளை பெற்ற நிலையில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி தமது 2வது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில், 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இன்றைய 5ஆம் நாள் ஆட்டம் இடம்பெற்ற வேளை, சகல விக்கட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்தநிலையில், 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2க்கு பூச்சியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]