யாழ்ப்பாணம் மணல்காடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ந்த குற்றவாளிக்கு கடூழிய சிறை

யாழ்ப்பாணம் மணல்காடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ந்த குற்றவாளிக்கு கடூழிய சிறை

யாழ்ப்பாணம் மணல்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மணல்காட்டு பிரதேசத்தை சேர்ந்த பதினாறு வயதினை விட குறைந்த பெண் பிள்ளையை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்டர் அருந்தவராஜா (47 வயது) என்பவர் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் இடம்பெற்ற குறித்த பாலியல் வன்புணர்வு வழக்கில் அரச சட்டவாதியான நாகரட்ணம் நிஷாந், குறித்த எதிரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமி கர்ப்பமாகியதில் நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

எனவே, ஒரு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அந்த பெண்ணை கர்ப்கவதியாக்கிய குற்றவாளிக்கு சட்டப் புத்தகத்தில் உள்ள அதியூட்ச தண்டனை வழங்க வேண்டும் என மன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து குறித்த நபருக்கு 15 ஆண்டுகால கடுழிய சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபா அபராதமும் கட்டத் தவறின் 18 மாத கடூழிய சிறையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 இலட்சம் ரூபா நஷ்டஈடும் செலுத்த தவறின் 18 மாத கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]