இ.தொ.கா மகளிர் அணித் தலைவியை கைது செய்ய முயற்சி

இ.தொ.கா மகளிர் அணித் தலைவியை கைது செய்ய முயற்சி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செனன் பகுதி மகளிர் அணித் தலைவியை ஹட்டன் பொலிஸார் கைது செய்ய முற்பட்ட நிலையில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்ட காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்று கூடியதால் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் (17) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தார்.

இதனையடுத்து செனன் கே,எம் பிரிவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவியை கைது செய்ய பொலிஸார் நேற்று (18) அங்கு சென்றதையடுத்தே ஹட்டன் மல்லிகை பூ சந்தியில் தீவிரநிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 16 ம் திகதி செனன் கே.எம். தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் மூன்று வீடுகள் சேதமாகியதுடன் 5 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் நிர்கதிக்குள்ளாகினர்.

சம்பவத்தை அடுத்து (17) மாலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கூரைத் தகடுகளை வழங்க மத்திய மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீதரன் அங்கு சென்றிருந்தார்.

இந்தநிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் அணித் தலைவி முறைகேடாக நடந்து கொண்டதுடன் பொருள் வினியோகத்திற்கும் தடையேற்படும் வகையில் செயற்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அங்கு கல்லால் தாக்க முற்பட்டதாகவும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீதரனினால் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

முறைபாட்டையடுத்து ஹட்டன் பொலிஸார் தோட்ட தலைவியை இன்று கைது செய்ய அந்த தோட்டத்திற்கு சென்ற நிலையில் கைது சம்பவம் தொடர்பில் அறுமுகம் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு கணபதி கணகராஜ் உள்ளிட்டோர் விஜயம் செய்ததுடன் சிறிய முறைபாடொன்றுக்கு ஒருவரை கைது செய்ய முடியாது என வாதிட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]