தொடர்ந்து வெளியாகவுள்ள கமலின் 6 படங்கள்

தொடர்ந்து வெளியாகவுள்ள கமலின் 6 படங்கள்

பிலிமில் வந்த பழைய படங்களை நவீன தொழில் நுட்பமான டிஜிட்டலுக்கு மாற்றி மீண்டும் திரைக்கு கொண்டு வந்து வசூல் பார்க்கும் வழக்கம் திரையுலகினர் மத்தியில் அதிகரித்து வருகிறது.

எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், நம்நாடு, சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்கள் டிஜிட்டலில் வந்தன.

தற்போது கமல்ஹாசன் நடித்த பழைய படங்களும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டு மீண்டும் திரைக்கு கொண்டு வரப்படுகிறது. கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வரும் சூழ்நிலையில் அவரது படங்களை டிஜிட்டலில் வெளியிடுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், ஸ்ரீதேவி, தீபா நடித்து 1981-ல் வெளியான “மீண்டும் கோகிலா” படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணி முடிவடைந்துள்ளது. அடுத்த மாதம் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இதில் இடம்பெற்ற சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

கமல்ஹாசன் நடித்த காதல் பரிசு, காக்கி சட்டை படங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. சலங்கை ஒலி, அபூர்வ சகோதரர்கள், விக்ரம், தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன் ஆகிய படங்களையும் டிஜிட்டலில் மாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சலங்கை ஒலி படம் இளையராஜா இசையில் 1983-ல் திரைக்கு வந்து சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகருக்கான தேசிய விருதுகளை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற மவுனமான நேரம், தகிட திமித, நாத விநோதம், ஓம் நமசிவாய ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமான கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தது பேசப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]