மத்தல விமான நிலையத்திற்கு யானைகளால் ஏற்பட்ட சிக்கல்

மத்தல விமான நிலையத்திற்கு யானைகள் ஏற்பட்ட சிக்கல்

கடந்த சில தினங்களாக மத்தல விமான நிலையத்தின் பாதுகாப்பு வேலிகளை உடைத்து யானைகள் உள் நுழைவதாக தெரியவந்துள்ளது.

இதனால், விமான நிலையத்தை சுற்றியுள்ள வேலிகள் உடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை, விமான நிலையத்தினுள் நுழையும் காட்டு யானைகளை விரட்டியடிக்க, கடந்த சில தினங்களாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைப்புக்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக, யானைகளின் இருப்பிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, காட்டு யானைகளுக்காக ஒதுக்க திட்டமிடப்பட்ட பராமரிப்பு முகாம் பகுதியும் தற்போது பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும், வர்த்தகர்கள் உள்ளிட்டோராலும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளமையே இந்த நிலைக்குக் காரணம் என வனஜீவராசி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]