சமத்து பொண்ணு சமைத்த மீன் வறுவல்

அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த சமந்தா, நாக சைதன்யா இருவரும் திருமணத்துக்கு பிறகு தனிக் குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

Samantha-Naga Chaitanya Wedding Photos

நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவுக்கு சமையல் தெரியாது இதனால் திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பாக சமையல் கற்கத் தொடங்கினார்.

திடீர் திடீர் என சமைத்து காதலன் சைதன்யா பரிமாறி வந்தார்.

திருமணம் ஆன கையோடு படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் சமையல் முழுவதையும் சமந்தாவே கவனித்து வருகிறாராம்.

samantha ruth prabhu

அண்மையில் மீன் வறுவல் சமைப்பதாக கூறி சமையல் அறைக்குள் நுழைந்தவர் தேவையான மசாலாக்களை சேர்த்து வறுவல் செய்து முடித்துள்ளார்.

மீனை துண்டாக வெட்டி வைப்பது முதல் மசாலா தடவுவதுவரை தனித்தனி புகைப்படங்கள் எடுத்து அதனை இணைய தள பக்கத்தல் பகிர்ந்துள்ளார்.

வறுவல் தயாரானபிறகு சைதன்யாவுக்கு சாப்பிடக்கொடுத்து எப்படியிருக்கிறது என கேட்டுள்ளார் அமைந்த வழக்கம்போல் அவர், ‘ஓ.கே நன்றாக இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு நழுவியுள்ளார்.

samantha ruth prabhu

இதுகுறித்து சமந்தா தனது இணைய தள பக்கத்தில் கூறும்போது,”மீன் வறுவல் பதமாக வந்தது. அதை சாப்பிட்டு ஒருவரும் இறக்கவில்லை…..’ என காமெடியாக கருத்து பகிர்ந்திருக்கிறார்.

இதேவேளை சமந்தா, சைதன்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி எதிர்வரும் 12ம் திகதி ஐதராபாத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]