அவருக்கு என் கையாலே சமைத்து கொடுப்பேன்

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா.

ileana

இவர் தற்பொழுது ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வருவதுடன், தமிழ், தெலுங்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தும் பட வாய்ப்புகள் வரவில்லை.

ஹிந்தி சினிமாவில் நல்ல நிலைமையில் வாழும் இலியானா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது ரகசிய காதலனும் ஆஸ்திரேலியா புகைப்பட கலைஞருமான ஆண்ட்ரு நியூபோனுடன் பொழுதை கழித்து வருகிறார்.

ileana

கடந்த சில ஆண்டுகளாகவே ஆண்ட்ரு, இலியானா நெருக்கமான நட்புடன் இருந்து வருவதுடன், இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில்  ஆண்ட்ருவுடன் மெல்பர்ன் சென்ற இலியானா, தனியாக அறை எடுத்து தங்கியவர்கள் ஓட்டல் உணவு சாப்பிடவில்லையாம்.

ileana

இலியானாவே தன் கையால் சமையல் செய்து ஆண்ட்ருவுக்கு கொடுத்துள்ளார்.

இது குறித்து இலியானா கூறும்போது,”ஆண்ட்ருவுக்கு பீட்ஸா, கிரீம் புருலீ எனப்படும் ஒருவகை டெசர்ட் மிகவும் பிடிக்கும். அவைகளை நானே என் கையால்  தயாரித்து அவருக்கு பரிமாறினேன். இந்த இரண்டும் கிறிஸ்துமஸ் தினத்தில் நான் விரும்பி செய்யும் ரெஸிப்பிகள். ஆண்ட்ருவும் சமையல் செய்வதில் திறமைசாலி. ஆனால் அவரது ஸ்டைல் வேறுவிதமாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை சமையல் செய்வது மிகவும் பிடிக்கும் என்பதால் எப்போதும் புதுப்புது சமையலை முயற்சித்துக்கொண்டே இருப்பேன். எனது அம்மா மிகவும் ருசியாக சமைப்பார். அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். என தெரிவித்துள்ளார்.

ileana

மேலும் “வீட்டில் சமையல் செய்வதற்காக வேறு ஆளை வைத்துக்கொள்ளவோ அல்லது ஓட்டலில் ஆர்டர் செய்வதையோ கைவிட்டு நீங்களே சமைக்க தொடங்குங்கள். அதுவொரு அற்புதமான அனுபவம்.” என் அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளார் இலியானா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]