சந்திவெளி சந்தையில் இன்றும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே பதற்ற நிலை

சந்திவெளி சந்தையில் இன்றும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே பதற்ற நிலை

சந்திவெளி சந்தையில்

மட்டக்களப்பு சந்திவெளி சந்தையில் இன்று (31) தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் அப்பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

சந்திவெளி சந்தையில்

சந்திவெளி சந்தைக் அருகாமையில் நேற்று (30) “சந்திவெளி பொதுச் சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற வாசகம் கொண்ட பதாதைகள் சந்திவெளி இளைஞர்களினால் கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து அப்பகுதியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.

தமிழர்கள் வாழும் பகுதியான சந்திவெளி சந்தையில் தமிழர்களை போன்று முஸ்லிம்களும் பொருட்களை எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கமாகும்.

வழமை போல் இன்று முஸ்லிம் அங்காடி வியாபாரிகள் பொருட்களை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்தபோது உள்ளுர்வாசிகள் உட்பட சிலர் அதற்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை உருவானது. இதையடுத்து முஸ்லிம் வியாபாரிகள் தமது பொருட்களுடன் வெளியேறியுள்ளர். சந்தையை அன்மித்த பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தபட்டள்ளனர்.

சந்திவெளி சந்தையில்

கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியில் பேருந்து தரிப்பிடம் அமைப்பது தொடர்பாக தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலையில் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழ் பிரதேசங்களிலுள்ள சந்தைகளில்; முஸ்லிம் அங்காடி வியாபாரிகள் வியாபார நடவடிக்கைளில் ஈடுபட பிரதேச மக்களினால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்படுகின்றனர்.

சந்திவெளி சந்தையில்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, ஓட்டமாவடி, கிரான் ஆகிய பிரதேசங்களிலும் கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குடா, பாசிக்குடா பிரதேசங்களிலும் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான், முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களிலும் பொலிஸ் ரோந்து, பாதுகாப்பு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

சந்திவெளி சந்தையில்சந்திவெளி சந்தையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]