டைகர் வுட்ஸ் மீண்டும் சர்வதேச கொல்ஃப் தொடரில்

டைகர் வுட்ஸ்பிரபல கொல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ் மீண்டும் சர்வதேச கொல்ஃப் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
காயமடைந்திருந்த நிலையில் கடந்த 9 மாதங்களாக விளையாடாதிருந்த அவர், அண்மையில் போக்குவரத்து விதிமீறலுக்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அடுத்த மாதம் 30ம் திகதி ஆரம்பமாகின்ற ஹீரோ உலக சவால் கிண்ணத்துக்கான கொல்ஃப் தொடரில் அவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

14 தடவைகள் முக்கிய சாம்பியன் பட்டங்களை வென்ற 41 வயதான டைகர்வுட்ஸ், நான்கு தடவைகள் முதுகு பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொண்டமையால் பின்னடைவை சந்தித்துள்ளார்.

டுபாயில் கடந்த ஃபெப்ரவரியில் நடைபெற்ற பாலைவன கொல்ஃப் தொடரில் இருந்து இடைவிலகியதன் பின்னர் எந்த தொடரிலும் பங்கேற்றிருக்கவில்லை.

2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் எந்த முக்கிய பட்டங்களையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]