ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இன்று இலங்கையில்

ஐரோப்பிய நாடாளுமன்றஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்றையதினம் இலங்கை வரவுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வனஜின் லெம்பட் தலைமையிலான குறித்த குழுவில் ரிச்சட் கோபட் (Richard Kobat) உல்ரிகோ முலர் (Ulrgo muler) மற்றும் வஜிட் கான் ஆகியோர் அடங்குகின்றனர்.

ஐரோப்பா வழங்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு நிகராக இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆராயும் முகமாகவே அந்த குழு இலங்கை வரவுள்ளது.

குறித்த உறுப்பினர்கள் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த குழுவின் உறுப்பினர்கள் நாளையதினம் வடமாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

ஐரோப்பிய சங்கத்தின் அனுசரணையில் வடக்கில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கிலே இந்த குழு அங்கு செல்லவுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]