மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதி விபத்து

மட்டக்களப்பு ஏறாவூர்மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இன்று (30) காலை ஏற்பட்ட வீதி விபத்தில் ஏறாவூர் நகரசை ஊழியரொருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகரசபைக்கு அருகாமையில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டதால் தலையில் காயமேற்பட்ட நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு, தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேரந்த, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் 45 வயதுடைய திருமதி கஜேந்தினி யோகேந்திரன் என்பவரே விபத்தில் காயமடைந்தவராவார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]