மட்டக்களப்பு – செங்கலடி நகரில் பதற்றமான சூழல்

மட்டக்களப்பு – செங்கலடி நகரில் பதற்றமான சூழல்

மட்டக்களப்பு - செங்கலடி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் முஸ்லிம் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என சுவரொட்டிகள் அடையாளம் தெரியாத நபர்களினால் ஒட்டப்பட்டிருந்ததனால் இன்று (30) திங்கட்கிழமை காலை செங்கலடி நகரிலும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

செங்கலடி நகரில் வழமைக்கு மாறாக பொலிஸ் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் முஸ்லிம் வியாபாரிகள் காலை வேளை வியாபார நடவடிக்களைகளுக்காக வந்த போதும் அப்பகுதியில் எற்பட்டிருந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக திரும்பிச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு - செங்கலடி

வாழைச்சேனை பிரதேசத்தில் கடந்த 2-3 நாட்களாக தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகளுக்கிடையில் பதற்ற நிலை காணப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை சந்தியில் பேருந்து தரிப்பிடம் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட முறுகல் நிலையில் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை கிரான் சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வர்த்த நடவடிக்கையில் ஈடுபட கூடாது என அப்பரதேச மக்களினால் திருப்பி அனுப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு - செங்கலடி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, ஓட்டமாவடி, கிரான் ஆகிய பிரதேசங்களிலும் கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குடா, பாசிக்குடா பிரதேசங்களிலும் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான், முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களிலும் பொலிஸ் ரோந்து, பாதுகாப்பு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

மட்டக்களப்பு - செங்கலடி

இன வன்முறைகளைத் தூண்டி விடும் விசம சக்திகளின் அல்லது நபர்களின் செயற்பாடுகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

மட்டக்களப்பு - செங்கலடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]