பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவி நீக்கம்

பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அது தொடர்பான கடிதமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்தே, துலிப் விஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடன் பணிப்புரைக்கு அமைய அவர், உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர, கடந்த காலங்களில்; அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil