அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் இலங்கையில்

அமெரிக்காவின் The Nimitz Carrier Strike Group (TNCSG) என்ற மிகப் பெரிய போர் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இந்த கப்பல் இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் இலங்கையில் இருக்கும்.

இந்த கப்பலின் நீளம் 333 மீற்றர் என்பதுடன், ஐயாயிரம் கடற்படையினர் தங்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது.

இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்துவதே இந்த குழவினரின் வருகை உறுதி செய்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலின் உயரம் 23 மாடிகள் உயரமுடையது.

அதேவேளை இந்த கப்பலின் வருகை மூலம் இலங்கைக்கு சுமார் 150 கோடி ரூபா பொருளாதார ரீதியில் நன்மை கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கப்பல் ஒன்று ஏற்கனவே இலங்கைக்கு 1985 ம் ஆண்டு வந்திருந்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.​

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]