உங்களுக்கு வேண்டியதை ஒன்றுபட்டு கேளுங்கள் – சீ.வி

சீ.வி.விக்னேஸ்வரன்படிக்காத ஒரு சிங்களத் துப்பாக்கி வீரனுக்கு நாங்கள் மதிப்பும் மரியாதையும் பயபக்தியும் வெளிப்படுத்துகிறோம். ஆனால் படித்த அன்புள்ள எமது சகோதரர்கள் என்று வந்தவுடன் நாம் அங்கு போட்டி, பொறாமை போன்றவற்றையே காட்டுகின்றோம். ஒருங்கிணைந்து வாழ்வது என்பது தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

முக்கியமாக உயர் குலத்தவர்கள் என்று தம்மை வர்ணிப்பவர்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும். யாவரையுஞ் சகோதரர்களாக ஏற்கும் மனோபாவம் பிறக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாம் எமது மதிப்புள்ள மக்களை வெளிநாடுகளுக்குப் பறிகொடுத்து விட்டே, தமிழர் உரிமைகளுக்காகப் போராடுகின்றோம். எமது கல்வி நிலை சரிந்து வருகின்றது. தொழில்களில் பாண்டித்தியம் பெற்றோர் தொகை குறைந்து வருகின்றது.

வெளியில் இருந்து வருவோரை இங்கு குடியமர்த்தி அரசாங்கம் அவர்களுக்கு எங்கள் காணிகளைப் பகிர்ந்தளித்து வருகின்றது. நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்? எமது தற்போதைய நிலை என்ன என்று நாங்கள் ஒருமித்துச் சிந்திக்கத் தொடங்கினால் ஒற்றுமையின் அவசியம் பற்றி ஓரளவு நாங்கள் புரிந்து கொள்வோம்.

முடியும் என்று நாம் நினைத்தால் முடியாதது ஒன்றில்லை. ஒற்றுமைப்படுவது அவ்வளவு சிரமமல்ல. எமது அடிப்படைகளிலாவது நாம் ஒற்றுமைப்பட வேண்டும். ஆனவே எனது வேண்டுகோள் சிங்கள அரசியல், மதத் தலைவர்கள் என்ன தருவார்கள் என்று யோசிக்காதீர்கள். உங்களுக்கு வேண்டியதை ஒன்றுபட்டுக் கேளுங்கள். ஒரே குரலில் கேளுங்கள் என, வடக்கு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்

வாரத்துக்கொரு கேள்விக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் பதிலளிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய இவ்வாற கேள்வி, பதில் அறிக்கையில் வினவப்பட்ட வினாவுக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவரது குறித்த அறிக்கை மேலே தரப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]