சிறிலங்கா கிரிக்கட் நிறுவன அதிகாரி ஒருவர் தொடர்பில் குற்றச்சாட்டு

சிறிலங்கா கிரிக்கட் நிறுவன அதிகாரி ஒருவர் தொடர்பில் குற்றச்சாட்டு

சிறிலங்கா கிரிக்கட்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடரில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு சென்றிருந்த சிறிலங்காகிரிக்கட் நிறுவன அதிகாரி ஒருவர் தொடர்பில், பாகிஸ்தான் கிரிக்கட் ஒழுங்கமைப்பு குழுவின் பெண்அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

குறித்த இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரி, தம்மிடம் தகாத வகையில் உரையாடல்களை நடத்தியதாக அவர் தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணி அண்மைக்காலமாக மோசமான நிலையை அடைந்துள்ளது.

எனினும் சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் நிதியில் பல அதிகாரிகளும், அவர்களது உறவினர்களும் ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு சென்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வாறான தகாத செயற்பாடுகளில் ஈடுபடுவதால் இலங்கைக்கே அவப்பெயர் ஏற்படும் என்றும் குறித்த பெண் அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]