5 பாடங்களில் மாத்திரம் சித்தியெய்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை!!

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 5பாடங்கள் மட்டுமே சித்தி என்ற நிலையில் தன்னை மாய்த்துக்கொண்ட மாணவி சாந்தலிங்கம் அனுசியா..

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வள்ளிபுனம் மகாவித்தியாலய மாணவியான இவர் சிறந்த தலமைத்துவ பண்புகளைக் கொண்ட முன் மாதிரியான மாணவி..

இம்மாணவி தாய் -தந்தை இறந்த நிலையில் அம்மப்பாவுடன் வாழ்ந்துவந்தவராவார்.
பரீட்சை முடிவுகள் வெளியானதை இட்டு பெறுபேறு குறைந்தமையினால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏட்டுக்கல்வியோடு உழவியல் ரீதியான வழிகாட்டலும் ஆலோசனையும் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தேவை என்பதே அனுசியாவின் இழப்பு சொல்லிச் சென்றிருக்கும் செய்தியாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]