5ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படாது! புதிய திகதியை அறிவித்த சபாநாயகர்

இம்மாதம் 5ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என தெரிக்கப்பட்டிருந்த நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் 7ம் திகதி தான் கூட்டப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்றப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ம் திகதி வரை நாடாளுமன்றத்தினை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது உத்தியோகபூர்வமற்றது என கருத்து தெரிவித்து வந்தனர்.

இதன் காரணமாக 5ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என பிரதமர் மகிந்த நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது நடைப்பெறும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின் போது எதிர்வரும் 7 ம் திகதி நாடாளுமன்றத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கட்சிப்பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]