5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகவுள்ளது

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகவுள்ளது

நடைபெற்று முடிந்துள்ள 2018ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

இதன்படி நாளை மறுதினம்(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, நடைபெற்ற நிலையில், இதில் மூன்று இலட்சத்து ஐம்பத்தையாயிரத்து முன்னூற்று இருபத்தாறு மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

மூவாயிரத்து ஐம்பது பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது இதன் முடிவுகள் வெளியாகும் தினம் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]